தமிழ்நாடு செய்திகள்
ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் சலுகை- ரெயில்வே அமைச்சகம்
- 2ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு.
- உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரெயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.
ஆட்டோ அப்கிரேடஷன் முறையில் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் கலுகையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கை வசதி இல்லாத பகல் நேர உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரெயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.