தமிழ்நாடு செய்திகள்
தமிழகம் முழுவதும் கூடுதலாக முதல்வர் படைப்பகங்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- அறிவார்ந்த சூழலை மாணவர்களுக்கு உருவாக்கும் முதல்வர் படைப்பகங்கள்.
- ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு.
அறிவார்ந்த சூழலை மாணவர்களுக்கு உருவாக்கும் முதல்வர் படைப்பகங்கள் கூடுதலாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கூடுதலாக முதல்வர் படைப்பகங்கள் திறக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.