தமிழ்நாடு செய்திகள்
அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல - திருமாவளவன் விளக்கம்
- ஆறு அறிவு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
- திருமாவளவன் இசைத்தட்டை வெளியிட்ட இயக்குனர் பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ஆறு அறிவு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இந்த விழாவில் திருமாவளவன் இசைத்தட்டை வெளியிட்ட இயக்குனர் பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய திருமாவளவன், "அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல. அடக்குமுறையை எதிர்த்து நிற்பது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்வது ஆதிக்க சாதி உணர்வு" என்று காட்டமாக தெரிவித்தார்.
அடங்க மறு, அத்து மீறு என்று கூறி திருமாவளவன் வன்முறையை தூண்டுகிறார் என்று தொடர்ச்சியாக இணையத்தில் விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.