தமிழ்நாடு செய்திகள்

VIDEO: வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த 2 இளைஞர்கள் கைது

Published On 2025-11-23 10:49 IST   |   Update On 2025-11-23 10:49:00 IST
  • இளைஞர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
  • இவர்களை கைது செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.

சிவகாசியில் சாலையில் சண்டையிடுவது போல் நடித்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து 2 இளைஞர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

இளைஞர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது. இவர்களை கைது செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜன் (21), வடபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News