தமிழ்நாடு செய்திகள்

வேனில் கடத்திய ரூ.1 லட்சம் குட்கா-புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2022-09-08 13:20 IST   |   Update On 2022-09-08 13:20:00 IST
  • புதுவாயலில் இருந்து ஆரணி ஜி.என்.செட்டி தெரு நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி வழியாக குட்கா, புகையிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன், தலைமை காவலர்கள் தியாகராஜன்,செல்லமுத்து ஆகியோர் ஆரணி எஸ்.பி கோவில் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவாயலில் இருந்து ஆரணி ஜி.என்.செட்டி தெரு நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து வேன் டிரைவரான சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த சல்மான் ஷரீப், ஆரணி ஜி.என்.செட்டி தெருவில் மளிகை கடை நடத்தி வரும் இளவரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News