தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலைக்கு மேலிடம் ஆதரவு?

Published On 2023-03-25 13:11 IST   |   Update On 2023-03-25 13:11:00 IST
  • அடுத்து வரும் நாட்களில் அண்ணாமலையிடம் அதிகமான சீற்றம் இருக்கும் என்கிறார்கள்.
  • அண்ணாமலை புரியாத புதிராக மாறிக்கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை அதிரடி அண்ணாமலையாக மாறியதைக் கண்டு எல்லா கட்சித் தலைவர்களும் பிரமித்து போய் உள்ளனர். அவர் ஏன் திடீரென இப்படி அதிரடி காட்டுகிறார் என்று பா.ஜ.கவில் உள்ள மூத்த தலைவர்களே அசந்து போய் நிற்கிறார்கள். இதோடு அண்ணாமலை காலி என்று கூட சிலர் நினைத்தனர்.

அண்ணாமலை அவசரம், அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்ட போது, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவியில் மாற்றம் வரப்போகிறது என்று நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமல்ல டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு இன்னும் கூடுதல் ஆக்ரோஷத்துடன் அண்ணாமலை அதிரடி காட்டத் தொடங்கி உள்ளார். அவரது பேச்சுக்கள் எல்லாம் பலரையும் மீண்டும் யோசிக்க வைத்துள்ளது.

பா.ஜ.க. மேலிட தலைவர்களின் 'ஆசி'யோடு தான் அண்ணாமலை தனது நடவடிக்கைகள், அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் அண்ணாமலையிடம் அதிகமான சீற்றம் இருக்கும் என்கிறார்கள். அண்ணாமலை புரியாத புதிராக மாறிக்கொண்டிருக்கிறார்.

Tags:    

Similar News