தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2022-08-25 20:55 IST   |   Update On 2022-08-25 20:55:00 IST
  • கருணாநிதி சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
  • தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.

மேலும், சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளையும் வழங்கி உரையாற்றினார்.

அப்போது, கருணாநிதியின் மகனாக அல்லாமல் திமுகவின் நேர்மையான தொண்டனாக சிலையை திறந்து வைப்பதாகவும், 4 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் நான் திறந்து வைத்த மூன்றாவது வெண்கலச் சிலை இது என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உறுதியளித்தார்.

Tags:    

Similar News