தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டசபை கூடியது: 2 நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர் ஆர்.என்.ரவி

Published On 2024-02-12 10:08 IST   |   Update On 2024-02-12 11:03:00 IST
  • சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

சென்னை:

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தலைமைச் செயலகத்தில் பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி உரையை தொடங்கினார். அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முடித்துக்கொண்டார்.

Tags:    

Similar News