கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை படத்தில் காணலாம்.
மோப்ப நாய் ராக்சி கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு வந்தபோது எடுத்தபடம்.
அத்தங்கிகாவனூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
- வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் மற்றும் பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.
- தங்க நகை, வெள்ளி பொருட்கள், 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அத்தங்கிகாவனூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தயாளன்(வயது56) விவசாயி ஆவார்.இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் இங்கு வசித்து வருகிறார். இத்தம்பதியரின் மூத்த மகன் சரவணன்(வயது30) ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் பரந்தாமன்(வயது28) ஷிப்பிங் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
திருமணமான இரண்டு மகன்களும் பணி நிமித்தமாக செங்குன்றத்தில் வசித்து வருகின்றனர். தயாளன் விவசாய நிலத்தை பராமரித்துக் கொண்டு தனது மனைவியுடன் அத்தங்கிகாவனூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.இந்நிலையில், தயாளனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவியுடன் சென்னை,செனாய் நகரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு சென்று இருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற கால தாமதம் ஏற்பட்டதால் நேற்று இரவு செங்குன்றத்தில் மகன்கள் வீட்டில் தயாளன் தனது மனைவியுடன் தங்கி இருந்தார்.இன்று காலை தனது மனைவியுடன் அத்தங்கிகாவனூருக்கு வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. வீட்டின் முன் பக்க கதவு மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் மற்றும் பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.
மேலும், கம்மல், வளையல், செயின், ஜிமிக்கி, மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட சுமார் 40 சவரன் தங்க நகைகளும், சுமார் 3 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பொருட்களும், ரொக்க பணம் ரூ.4 லட்சம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். ஊத்துக்கோட்டை துணைபோலிஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டார். மேலும், விவசாயி தயாளன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்துக்கு திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய்
ராக்சி வரவழைக்கப்பட்டது.