தமிழ்நாடு

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும்- கார்த்தி சிதம்பரம் பேட்டி

Published On 2024-02-24 04:50 GMT   |   Update On 2024-02-24 04:50 GMT
  • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது.
  • கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள்.

காரைக்குடி:

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறை மூலமே தீர்க்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை என்பது வெறும் கனவுதான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எனது தொகுதி மக்களுக்கு ஒரு எம்.பி.யாக என்னால் முடிந்ததை செய்துள்ளேன்.

பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவாக கோரினேன். அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படு வதை முற்றிலுமாக நிறுத்துவோம்.

கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, நகர தலைவர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News