தமிழ்நாடு

காஞ்சியில் எல்.இ.டி. திரை அகற்றம்... நிர்மலா சீதாராமன் கண்டனம்

Published On 2024-01-22 04:01 GMT   |   Update On 2024-01-22 05:33 GMT
  • காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

காஞ்சிபுரம்:

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் எல்.இ.டி. சப்ளையர்ஸ் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை "வயித்திலே அடிப்பது" என்பார்கள் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News