தமிழ்நாடு செய்திகள்
ஆலப்பாக்கம் சண்முகம் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
- கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் மயங்கி விழுந்து கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன்.
மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான சண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.