தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கான 13-வது சட்டதிருத்தத்தை அமல்படுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

Published On 2023-07-19 08:08 GMT   |   Update On 2023-07-19 08:08 GMT
  • நிலப்பறிப்பு மற்றும் போலீஸ் அதிகாரத்தை பறிப்பதும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது.
  • இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கை அரசு கடந்த காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் இலங்கை தமிழர்களின் தலைவர் ஆர்.என்.சம்மந்தன் கடிதம் எழுதியிருக்கிறார்.

நிலப்பறிப்பு மற்றும் போலீஸ் அதிகாரத்தை பறிப்பதும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது.

இதன்மூலம் மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்க வழிவகை செய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து முடக்கி வருவதையும் தமது கடிதத்தில் பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஜூலை 21-ந் தேதி இந்திய பிரதமரை சந்திக்க வருகிற இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் தங்களது உரிமைகளை வலியுறுத்தி பாதுகாப்பு தர வேண்டுமென்று இலங்கை தமிழ் அமைப்புகளின் செய்தித் தொடர்பாளர் சம்மந்தன் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் இலங்கை தமிழர்களுக்காக போராடி பெறப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News