தமிழ்நாடு செய்திகள்
ஜே.பி.நட்டாவின் உதகை ரோடு ஷோ ரத்து
- தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
- இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.
உதகை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.