தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

Published On 2023-11-15 11:06 IST   |   Update On 2023-11-15 11:06:00 IST
  • வெள்ளி கிலோவுக்கு ரூ.1700 உயர்ந்து ரூ.77 ஆயிரத்து 700 ஆக உள்ளது.
  • ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்கிறது.

சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44 ஆயிரத்து 920-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. பவுன் ரூ.45 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45 ஆயிரத்து 160-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 645-ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1700 உயர்ந்து ரூ.77 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்கிறது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டு பவுன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்து ரூ.45 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தை தாண்டியது.

Tags:    

Similar News