தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

Published On 2024-01-13 09:46 IST   |   Update On 2024-01-13 09:46:00 IST
  • வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.
  • கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News