தமிழ்நாடு செய்திகள்

நான் என்ன தப்பு செய்தேன்... ஏன் என்னை கைவிட்டீங்க... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2026-02-06 09:08 IST   |   Update On 2026-02-06 09:08:00 IST
  • இன்னும் 10 தேர்தலில் நிற்பேன். அதுவும் ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன்.
  • எனக்கு சொந்த ஊர் என்றால் ராயபுரம் தான்.

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற வைத்த நீங்கள் 2021-ம் ஆண்டு தேர்தலில் கைவிட்டுடீங்களே? இப்படி. நான் என்ன தப்பு செய்தேன். ஊரை அடித்து உலையில் போட்டேனா?, கட்ட பஞ்சாயத்து பண்ணேனா? கள்ளச்சாராயம் காய்ச்சினேனா, ரவுடி மாமூல் கேட்டேனே, இல்லை அடாவடித்தனம் பண்ணி பொறுக்கித்தனம் பண்ணி ரவுடித்தனம் பண்ணேனே? சொல்லுங்க பார்க்கலாம் யாராவது. அப்படி இருந்தா அரசியலை விட்டு போய்விடுகிறேன்.

அந்த மாதிரி என்றைக்கும் அ.தி.மு.க. கிடையாது. ஜெயக்குமாரும் கிடையாது. உங்களையே சுத்தி சுத்தி வந்தனேன். இன்னும் 10 தேர்தலில் நிற்பேன். அதுவும் ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன். நான் பொதுச்செயலாளர் கிட்ட கேட்டேன் என்றால் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர் இல்லன்னா சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போய் நிற்பேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் என்றால் ராயபுரம் தான் என்றார். 

Tags:    

Similar News