தமிழ்நாடு

ஈ.சி.ஆர். விஜிபியில் அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் திடீர் நிறுத்தம்

Update: 2022-06-28 07:17 GMT
  • அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
  • கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கடந்த 23-ம் தேதி அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்காக, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர். இதற்கு மத்தியில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கில் நடத்தவுள்ளதாக சற்று நேரம் முன்பு தகவல் வெளியானது. இதற்காக, அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஈசிஆர் விஜிபியில் அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News