தமிழ்நாடு

இரட்டை இலை எங்களுக்கு வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பி.எஸ். கடிதம்

Published On 2024-03-16 10:30 GMT   |   Update On 2024-03-16 10:44 GMT
  • சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்டி சட்ட விரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தேர்தல் ஆணையம் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 2 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான கால அவகாசம் வருகிற 26-ந்தேதி வரை நிலுவையில் உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் படிவம் ஏ மற்றும் பி-யில் கையெழுத்திடுவதற்காக உள்ள அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும். சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்டி சட்ட விரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சிவில் வழக்கு காரணமாக இரட்டை இலை சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என்று அச்சப்படுகிறோம். எனவே தேர்தல் ஆணையம் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என அங்கீகரித்து தங்கள் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News