தமிழ்நாடு

பிப். 9-ல் காங்கிரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக

Published On 2024-01-29 06:15 GMT   |   Update On 2024-01-29 07:00 GMT
  • தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.
  • 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், வருகிற 9-ந்தேதி காங்கிரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் தமிழக குழுவினர் பங்கேற்ற நிலையில், 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News