தமிழ்நாடு செய்திகள்

சிறுமியை கொடுமைப்படுத்திய விவகாரம் - தி.மு.க. எம்.எல்.ஏ.-வின் மகன், மருமகள் கைது

Published On 2024-01-25 16:47 IST   |   Update On 2024-01-25 17:01:00 IST
  • 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவாகினர்.
  • இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

சென்னை:

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News