தமிழ்நாடு

ஆலங்குளம் அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிள் புகுந்து வியாபாரி பலி

Published On 2023-05-31 06:21 GMT   |   Update On 2023-05-31 06:21 GMT
  • பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிள் புகுந்து வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). வியாபாரி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார்.

ஆலங்குளத்தை அடுத்த சிவலார்குளம் விலக்கு பகுதியில் அவர்கள் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஆலங்குளம் அருகே கீழகரும்புளியூத்து கிராமத்தை சேர்ந்த அன்புராஜ் என்ற நுங்கு வியாபாரி தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சிவலார்குளம் விலக்கு பகுதியில் அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் சங்கர் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதி அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News