தமிழ்நாடு

ஈபிஎஸ்க்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Update: 2022-06-28 09:04 GMT
  • அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்பு.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்து அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஜூலை 11-ல் பொதுக்குழு கூடும் என அறிவித்தும் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கையெழுத்திட்டு ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்க்கு எதிரான மனு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News