தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்- மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்
- திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
- மாவட்டத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்" நடத்திட முடிவெடுக்கப்பட்டு, முதலாவதாக கடந்த ஜூலை 26 திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இதை தொடர்ந்து தென் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) பயிற்சி பாசறைக் கூட்டம்" வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று ராமநாதபுரம், தேவிப்பட்டினம் சாலை, பேராவூர் என்ற இடத்தில், முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது.
தென் மண்டலத்துக்குட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 19 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தத்தமது மாவட்டங்களுக்குட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) கூட்டத்தை' கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இதில் பங்கேற்கும் மாவட்டங்கள் விவரம் வருமாறு:-
ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.