தமிழ்நாடு செய்திகள்

டியூஷனிற்கு வந்த மாணவிகளை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்திய பள்ளி ஆசிரியர்- போக்சோவில் கைது

Published On 2023-10-31 11:40 IST   |   Update On 2023-10-31 11:40:00 IST
  • மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.

காடையாம்பட்டி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50).

இவர் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் காடையாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூஷன் நடத்தி வருகிறார்.

இவரிடம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர். இதில் 2 மாணவிகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் ராஜமாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர். 

Tags:    

Similar News