தமிழ்நாடு
null

பா.ஜ.க கூட்டணியில் இணைந்த சரத்குமாரை வரவேற்கிறோம் - அண்ணாமலை

Published On 2024-03-06 10:56 GMT   |   Update On 2024-03-06 10:59 GMT
  • சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
  • சரத்குமாரின் கூட்டணி முடிவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருகிறது.

அந்த வகையில், அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

சரத்குமாரின் கூட்டணி முடிவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் பத்தாண்டு கால, ஊழலற்ற, நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் நமது பிரதமர் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட முன்வந்திருக்கும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர், அண்ணன் சரத்குமார் அவர்களை தமிழ்நாடு பாஜக சார்பாக வரவேற்று மகிழ்கிறோம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் நேரத்தில், தேசியத்தின் மற்றுமொரு குரலான அண்ணன் சரத்குமார் அவர்கள் வரவு, தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என்பது உறுதி" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News