தமிழ்நாடு செய்திகள்

இந்த பெருங்கூட்டம் பொய் செய்திகளை பரப்புபவர்களின் தூக்கத்தை கெடுக்கும்- பிரதமர் மோடி

Published On 2024-03-04 20:46 IST   |   Update On 2024-03-04 20:46:00 IST
  • குடும்ப அரசியல் செய்பவர்கள், உழைப்பில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவர்கள்.
  • எனக்கு வருங்கால சந்ததியினர் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியா கூட்டணியின் ஒரு முக்கியமான விஷயத்தில் இன்று உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்பபை வழங்கியுள்ளது.

காங்கிரஸ், திமுக, இந்தியா கூட்டணி, ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் மூழ்கி இருக்கும் கட்சிகள். இவர்களால் தான் இளைஞர்கள் இந்திய அரசியலில் இருந்து விலகி நிற்கிறார்கள்.

எனக்கு பிடித்த பணி இந்தியாவை தூய்மைப்படுத்துவது, என்ன கஷ்டங்கள் வந்தாலும் நான் நாட்டை தூய்மைப்படுத்துவேன்.

குடும்ப அரசியலுக்கு ஒரு குணம் உண்டு. இவர்கள் உழைப்பில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவர்கள்.

இதனால் பலரின் ஆசைகள், நிறைவேறாமல் போய்விட்டன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தாய், தந்தையரும் நான் கூறும் விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள கட்சியின் ஆதரவோடு போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனால் எனக்கு வருங்கால சந்ததியினர் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.

நீங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுப்போம். இது எனது உத்தரவாதம்.

வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு, வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடிப்படையாக இருக்கும். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் நீங்கள் எனக்கு ஆசிர்வாதம் தர வந்துள்ளீர்கள்.

இந்த பெருங்கூட்டம் பொய் செய்திகளை உருவாக்குபவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.

வந்தே மாதரம்..!

இவ்வாறு கூறி பிரதமர் மோடி கூட்டத்தை நிறைவு செய்தார்.

Tags:    

Similar News