தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் கொலை, கொள்ளை சாதாரணமாகிவிட்டது- அண்ணாமலை
- தமிழகத்தில் கொலை, கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது.
- தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடி கொண்டிருக்கிறது.
சென்னை:
சென்னை வானகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை, தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
* சுவையான மாம்பழம் இருக்கும் மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்.
* தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொலை, கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது.
* நேற்று தேசிய கட்சியின் மாநிலத்தலைவரை அவரது வீட்டு வாசலில் வைத்து கூலிப்படையினர் வெட்டி கொலை செய்துள்ளனர்.
* தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடி கொண்டிருக்கிறது.
* தமிழகத்தில் சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்று கூறினார்.