தமிழ்நாடு செய்திகள்

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2023-11-18 10:39 IST   |   Update On 2023-11-18 10:44:00 IST
  • தமிழக கவர்னர் அவசர அவசரமாக 10 சட்ட மசோதாக்களை எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
  • தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை:

தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது:

எனது உடல்நலனை விட மாநில மக்களின் நலனே முக்கியம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி.

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அவசர அவசரமாக இந்த சட்ட மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News