தமிழ்நாடு செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2024-06-04 21:35 IST   |   Update On 2024-06-04 21:35:00 IST
  • ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.
  • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இதற்கிடையே, ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.

தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்குதேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள். தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News