தமிழ்நாடு

பர்கூர் வனப்பகுதியில் இறந்த கிடந்த ஆண் யானை- வனத்துறையினர் விசாரணை

Published On 2023-11-25 05:58 GMT   |   Update On 2023-11-25 05:58 GMT
  • இன்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
  • யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் மான், கரடி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் இந்த பகுதிகளில் யானைகள் அதிகளவில் வசித்து வருகிறது. இந்த பகுதியில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறுவது வழக்கம்.

இந்நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் பர்கூர் வனப்பகுதி கோவில் நத்தம் 2-வது பீட்டுக்கு உட்பட்ட செங்குளம் வனப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பர்கூர் தேவர்மலை கால்நடை மருத்துவர்கள் பரத் மற்றும் சதாசிவம் ஆகியோரும் யானையை பிரேத பரிசோதனை செய்வதற்காக வனப்பகுதிக்கு சென்றனர்.

இதை தொடர்ந்து இன்று இறந்த கிடந்த யானை பிரேத பரிசோதனை செய்யபடுகிறது. அதன் பிறகு தான் அந்த யானை எப்படி இறந்தது என்பது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News