தமிழ்நாடு

ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு- மு.க.ஸ்டாலின் டுவீட்

Published On 2023-07-18 19:55 GMT   |   Update On 2023-07-18 19:55 GMT
  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்.
  • ஒற்றுமையே நமது பலம், ஒன்றாக இணைந்து #இந்தியா வெற்றி பெறும்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பின்னர் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பெங்களுருவில் மதச்சார்பற்ற, ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு நடந்தது.

பிரிவினைவாத அரசியலின் பிடியில் இருந்து நமது தேசத்தின் பன்மைத்துவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் #இந்தியா - இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை (#INDIA - Indian National Developmental Inclusive Alliance)உருவாக்கியுள்ளோம்.

தேசியவாதத்தின் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எதேச்சாதிகாரிகள் இறுதியில் வீழ்வார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது!

ஒற்றுமையே நமது பலம், ஒன்றாக இணைந்து #இந்தியா வெற்றி பெறும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News