தமிழ்நாடு செய்திகள்
"பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்": பழைய வீடியோவை பகிர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ்
- ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது.
- எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது
விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி, காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், "எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்" என பதிவிடப்பட்டுள்ளது