தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு 16,932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

Published On 2024-01-08 08:21 GMT   |   Update On 2024-01-08 08:21 GMT
  • சென்னையில் இருந்து 10,750 பஸ்கள் விடப்படுகிறது.
  • பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகிறது.

சென்னை:

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வருடம் 15-ந்தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 விடுமுறை நாட்களுடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை சேர்ந்து வருவதால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இதனால் வெளியூர் பயணம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதையடுத்து வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் போக்குவரத்து முதன்மை செயலாளர் கோபால், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக சிறப்பு பஸ்கள் விட திட்டமிடப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 17 ஆயிரம் பஸ்களும் சென்னையில் இருந்து 11 ஆயிரம் பஸ்களும் இயக்க முடிவு செய்யப்படுகிறது.

இதே போல பொங்கல் பண்டிகை முடிந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகி றது.

இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். குறிப்பாக தென் மாவட்டங்கள் சேலம், கோவை நகரங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டு செல் லும். மற்ற நகரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்படுகிறது.

Tags:    

Similar News