தமிழ்நாடு செய்திகள்

வழக்கம்போல கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்குனர்

Published On 2024-05-15 08:53 IST   |   Update On 2024-05-15 11:12:00 IST
  • தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது.
  • நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

சென்னை:

தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News