தமிழ்நாடு செய்திகள்

வாழ்வு உயர திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும்: முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்து

Published On 2023-12-03 11:21 IST   |   Update On 2023-12-03 11:50:00 IST
  • தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துகள்.
  • ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்கள்.

சென்னை:

மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி இன்று தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துகள். சமூகச் சமத்துவமும் சுயமரியாதையும் போற்றி, உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியிருப்பதாவது:-

"சாதிப்பதற்கு மாற்றுத் திறன் தடையல்ல" என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப, தடைகளை தகர்த்தெறிந்து ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளை பேசும் தினமாக நின்றுவிடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் சம வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு மாற்றுத் திறனாளியும் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ எளிதில் அணுகக்கூடிய சமமான உலகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News