தமிழ்நாடு செய்திகள்
பார்வையற்ற மாணவன் சிவரஞ்சன்.
10-ம் வகுப்பு தேர்வில் பார்வையற்ற மாணவர் 455 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
- சிவரஞ்சன் முற்றிலும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி.
- நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மார்க்கெட் குமரன் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஓவியராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு அக்சயா(18), சிவரஞ்சன்(15), கிரண்யா(9) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். அக்சயா கல்லூரியில் படித்து வருகிறார். சிவரஞ்சன் முற்றிலும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி ஆவார்.
இவர் மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். தமிழ்-96, ஆங்கிலம்-87, கணிதம்-87, அறிவியல்-92, சமூக அறிவியல்-93 என மொத்தம் 455 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.