என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது- அண்ணாமலை
- அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும்.
சேலம் சமூர் ஆர்வலர் புகாரின் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் வழக்கு தொடரப்படுகிறது.
சேலம் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் அளித்த புகாரின்பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.
அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தொடர்ந்து, அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எத்தனை வழக்குகள் போட்டாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது;
கடந்த 3 ஆண்டுகளில், தி.மு.க அரசு என் மீதும், எங்கள் பா.ஜக., நிர்வாகிகள் மீதும் உண்மையை பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது. தற்போது என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது.
என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய தி.மு.க.வின் உண்மை நிலை மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.