ரகளை செய்த வடமாநில வாலிபர்.
குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்குள் புகுந்து பெண்களிடம் ரகளை- வடமாநில வாலிபர் மீது சரமாரி தாக்குதல்
- பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த வாலிபரை போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இக்குடியிருப்பு பகுதிக்கு 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார்.
அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்த அந்த வாலிபர், அங்கிருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து தாக்கினர்.
பின்னர் அவரை நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த வாலிபரை போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து அந்த பகுதியினர் அவரை சரிமாரியாக தாக்கினர். இதில் ரத்த காயமடைந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மீண்டும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரகளையில் ஈடுபட்ட வாலிபர் பெயர் மனோஜ் என கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.