தமிழ்நாடு

ராணுவவீரர் வேல்முருகன் கொலை செய்யப்பட்ட அவரது வீட்டின் முன்பு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

ராணுவ வீரர் குத்திக்கொலை: விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது சம்பவம்

Published On 2023-10-17 05:33 GMT   |   Update On 2023-10-17 05:33 GMT
  • கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
  • தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன். இவர் கடந்த 2018-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது அவர் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வேல்முருகன் வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வேல்முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து விளாத்திகுளம் டி.எஸ்.பி. (பொறுப்பு) லோகேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். முன்விரோதம் காரணமாக வேல்முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News