எடப்பாடி பழனிசாமி அரசு மோடிக்கு பயந்து ஆட்சியை நடத்துகிறது- தினகரன்
கரூர், ஏப். 6-
கரூர் பாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பா ளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் மாயனூரில் பிரசா ரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எதிரணியில் ஆளும் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தம்பிதுரைக்கு செல்லும் இடங்களில் எல் லாம் மக்கள் எவ்வாறு வர வேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். காரணம், தொகுதிக்கு எதுவும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினர். அவர் தத்தெ டுத்த கிராமத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் குறைபாடு. எவ்வளவோ மக் கள் பிரச்சினைகள் இருக்கி றது.
அதையெல்லாம் விட்டு விட்டு துணை சபாநாயகர் அந்தஸ்தில் இருப்பவர் தன் னையும், தன் குடும்பத்தை யும், தனது தொழிலையும் வளப்படுத்தி கொள்வ தற்கா கத்தான் இந்த பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பத வியை பயன்படுத்துகிறார். அவரை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் காங் கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். காங்கி ரஸ் கட்சி கடந்த 40 ஆண் டுகளில் தமிழகத்திற்கு என்ன செய்தது. 2004-ல் இருந்து 2014 வரை ஆட்சியில் இருந்த போது நமதுஜீவாதார பிரச் சினையாகிய காவேரி பிரச் சினையில் கூட காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் சொல்கிறார், நான் செல்போனில் பேசியே ராகுல் காந்தியிடம் எல்லா திட்டங்களையும் பெற்று தரு வேன் என்கிறார்.
அந்த காங்கிரஸ் வேட்பா ளர் உங்கள் ஊருக்கு வாக்கு கேட்க வந்தால் அவரிடம் நீங்கள் கேளுங்கள். நீங்கள் செல்போன் மூலம் ராகுல் காந்தியிடம் சொல்லி கர்நா டகாவில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சிவக்குமார், காவேரி அணை யின் குறுக்கே மேகதாது அணைகட்டுவேன் என பிடி வாதம் பிடிக்கிறாரே, அதனை தடுத்து நிறுத்த சொல்லுங்கள் என்று அவரிடம் கேளுங்கள்.
தமிழக மக்களை எல்லாம் ஏமாற்றி வாக்கு வாங்கி வென்று விடலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. தேசிய கட்சிகளை நம்பி பயன் இல்லை என்பதால்தான் கடந்த 2014 தேர்தலில் ஜெய லலிதாவை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள்.
அவர் உயிரோடு இருந்த வரை தமிழகத்தை பாதிக் கின்ற, குறிப்பாக விவசா யத்தை பாதிக்கின்ற எந்த வொரு திட்டத்தையும் அனு மதிக்கவில்லை. நீதிமன்றத் தில் போராடித்தான் காவேரி மேலாண்மை வாரி யம் அமைப்பதற்கான தீர்ப் பினை ஜெயலலிதா பெற்று தந்தார்.
அவரது மறைவிற்கு பிறகு கையாலாகாத பழனி சாமி அரசு, மோடிக்கு பயந்து கொண்டு சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தால் அந்த திட்டம் இன்றைக்கு காவேரி மேலாண்மை ஆணையமாக வந்திருக்கிறது. இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு தேவையான குடிநீரைபெற்று தருவதற்கு இன்னும் மோடி அரசு அதனை சரியாக பயன் படுத்தவில்லை.
போதாக்குறைக்கு மேக தாதுவில் அணை கட்டுவேன் என்று அங்கே கர்நாடகா முயற்சி செய்கின்ற போது அதற்கும் மறைமுகமாக மோடி அரசு ஆதரவு அளிக் கிறது. காரணம் , தமிழ்நாட் டில் தேசிய கட்சிகளான காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக் கும் செல்வாக்கு இல்லை. கர்நாடகாவில்தான் அவர்க ளுக்கு வாய்ப்பிருக்கிறது. ஆட்சி அமைக்க முடியும் என்ற காரணத்தினால் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை கூட அவர் கள் நிராகரிக்கிறார்கள்.
இது போன்று தமிழகத்தை வஞ்சிக்கின்ற தேசிய கட்சி களை புறக்கணிப்பதன் மூலம் தான் தமிழ்நாட்டு உரிமைக்காக போராடும் மாநில கட்சியை ஆதரிப்பதன் மூலம்தான் உங்களது தேவையை டெல்லியில் போராடி பெற்றுத்தர முடி யும். அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த தேர்தலில் போட்டியிடு கிறது.
விவசாயத்தை அழித்து தமிழ்நாட்டை பாலைவன மாக்க வேண்டும். இங் குள்ள மக்கள் எல்லாம் வேறு மாநிலத்திற்கு அகதிகளாக செல்லவேண்டும். விவசா யத்தை அழித்து நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொடு த்திட நினைக்கிறார்.தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் ஆட்சியை முடி வுக்கு கொண்டு வரவும், தமிழ்நாட்டை கடந்த காலங் களில் வஞ்சித்து தமிழக நலன்களை செய்யாத காங்கிரஸ் கட்சியையும் புறக்கணிக்கும் விதமாக தக்க பாடம் புகட்டவேண்டும்.
தமிழகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக கொடுத்து வரும் தொல்லைகள் தெரி யும். பழனிசாமி போலவோ, பன்னீர்செல்வம் போலவோ நாம் அவர்களுக்கு அடி பணிய வில்லை, மண்டியிடவில்லை என்ற காரணத்தினால்தான் நமது இயக்கத்தை அழிக்க பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.