செய்திகள்

நெல்லையில் புதுப்பெண் வெட்டிக்கொலை - கைதான தம்பி பரபரப்பு வாக்குமூலம்

Published On 2019-03-28 10:52 GMT   |   Update On 2019-03-28 10:52 GMT
நெல்லையில் புதுப்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது தம்பி வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் கனிமொழி (வயது25). ‘பி.இ.’ பட்டதாரி. இவரது மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் பாளை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

கனிமொழிக்கு கடந்த 6.2.19 அன்று ஏர்வாடியை சேர்ந்த லெனின் என்ற வாலிபருடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கனிமொழி மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த கனிமொழியை அவரது தம்பி சுந்தரபாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். ரத்தம் கொட்டிய அரிவாளுடன் அவர் பாளை போலீசில் சரண் அடைந்தார்.

பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் சுந்தரபாண்டியனை கைது செய்தனர். கைதான சுந்தர பாண்டியன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது அக்காள் கனிமொழியின் திருமணம், கடந்த மாதம் மிகவும் சிறப்பாக நடந்தது. மாப்பிள்ளை லெனின் லாரி டிரைவராக இருப்பது என் அக்காவுக்கு தெரிந்து, சம்மதித்து தான் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்.

பின்னர் சமரசம் செய்து கனிமொழியை மீண்டும் மாப்பிள்ளையுடன் சேர்த்து வைத்தோம். 10 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, நான் அவருடன் வாழ மாட்டேன் என்று மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். இது எங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரத்தில் அவளை வெட்டிக் கொலை செய்தேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பாளை போலீசார் சுந்தர பாண்டியனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News