செய்திகள்

கோவை அருகே சிறுமி கடத்தி கொலை - துப்பு கொடுத்தால் சன்மானம்

Published On 2019-03-28 09:02 GMT   |   Update On 2019-03-28 09:02 GMT
கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #GirlHarassment
கவுண்டம்பாளையம்:

கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.



சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. #GirlHarassment
Tags:    

Similar News