செய்திகள்

மதுரையில் ரூ.4.50 கோடி ரொக்கம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படை அதிரடி

Published On 2019-03-22 06:43 GMT   |   Update On 2019-03-22 06:43 GMT
மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.50 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #ElectionFlyingSquad #LSPolls
மதுரை:

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மதுரை யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கத்தை கத்தையாக ரூ.4.50 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தில் வந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, அந்த பணம் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், திருச்சியில் இருந்து எடுத்து வருவதாகவும் கூறினர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.  இதையடுத்து பணத்துடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.  பணத்திற்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



இதேபோல் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #ElectionFlyingSquad #LSPolls

Tags:    

Similar News