செய்திகள்

குடியரசு தினவிழா: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

Published On 2019-01-20 17:08 IST   |   Update On 2019-01-20 17:08:00 IST
குடியரசு தினவிழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

ஆலந்தூர்:

குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து பொது மக்கள் அதிகம் கூடும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல் பார்வையாளர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருகிற 31-ந் தேதி வரை பார்வையாளர்கள் தடை அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News