செய்திகள்

சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2019-01-16 05:06 GMT   |   Update On 2019-01-16 05:24 GMT
சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa
சேலம்:

சேலம் அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இந்த மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார்.



சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் விபத்துகளை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.138 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நல உதவிகளையும் வழங்குகிறார்.

இந்த விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa


Tags:    

Similar News