செய்திகள்

ரேசன் பொருள் வாங்குவோருக்கு மத்திய அரசின் கட்டுப்பாடு இல்லை- அமைச்சர் காமராஜ்

Published On 2019-01-07 16:08 IST   |   Update On 2019-01-07 16:08:00 IST
தமிழ்நாட்டில் ரேசன் பொருள் வாங்குவோருக்கு மத்திய அரசின் கட்டுப்பாடு பொருந்தாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதை, ஆலடி அருணா (தி.மு.க.), “தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்படி ரேசன் பொருள் வாங்குவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையில் படித்தேன். அதை அமல்படுத்தினால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, அந்த கட்டுப்பாடுகளை அரசு தளர்த்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு அமைச்சர் காமராஜ் பதில் அளிக்கும் போது, “தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்படி ரேசன் பொருட்களை பெறுவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் ரேசன் பொருள் வாங்குவோருக்கு அது பொருந்தாது. தமிழக அரசு நியாய விலைக்கடைகளில் இலவச அரிசி மற்றும் பொருட்களை வழங்குவதற்காக ஆண்டுக்கு 6ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குகிறது.

எனவே தமிழகத்தில் தற்போது ரேசன் பொருள் வாங்குவோர் அனைவருக்கும் தொடர்ந்து வினியோகம் செய்யப்படும்.
Tags:    

Similar News