செய்திகள்
நோயாளிகளுடன் இணைந்து தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பசேகரன் போராட்டம் நடத்திய காட்சி.

பென்னாகரம் அரசு மருத்துவமனை முற்றுகை- நோயாளிகளுடன் இணைந்து திமுக எம்எல்ஏ போராட்டம்

Published On 2018-12-27 16:14 IST   |   Update On 2018-12-27 16:14:00 IST
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் குறைவாக உள்ளதை கண்டித்து நோயாளிகளுடன் இணைந்து தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டார்.
பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு டாக்டர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். இன்று மருத்துவமனை பணியில் ஒரு டாக்டர் மட்டும் இருந்துள்ளார். இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து தினமும் இது போல் டாக்டர்கள் குறைவாக உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் பென்னாகரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்ப சேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தார்.

அப்போது பணியில் டாக்டர் ஒருவர் மட்டுமே இருந்ததால் நோயாளிகளுடன் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News