உலகம்

2026-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம்- அமெரிக்கா

Published On 2025-12-31 13:30 IST   |   Update On 2025-12-31 13:30:00 IST
  • பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
  • இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

வாஷிங்டன்:

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் 2026-ம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஆயுத மோதல் ஏற்படும் என்று அமெரிக்க சிந்தனைக் குழு ஒன்று கணித்துள்ளது. கவுன்சில் ஆன் பாரின் ரிலேஷன்ஸ் அமைப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் அதிகரித்த பயங்கரவாதச் செயல்பாடு காரணமாக 2026-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மீண்டும் தலைதூக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களால் 2026-ல் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுத மோதல் ஏற்படுவதற்கு மிதமான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News