செய்திகள்

பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர் வைகோ - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

Published On 2018-12-08 10:29 GMT   |   Update On 2018-12-08 10:29 GMT
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். #TamilisaiSoundararajan #Vaiko
கோவை:

கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 மாநில தேர்தலில் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியை கொடுத்துவிட்டு தான் வாக்கு சேகரித்து உள்ளோம். கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும் தெலுங்கானா தவிர்த்து மற்ற மாநிலங்களில் தேர்தலில் வெற்றிப் பெறுவோம். பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது . பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் பிரதமர் மோடிக்கு பங்கு உள்ளது.



ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர். அவர் ஆக்கப்பூர்வமற்ற வகையில் நிலை தடுமாறி பேசி வருகிறார்.

மத்திய நீர்வளத்துறை ஆணையரே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது.

தலைகீழாக நடந்தாலும் தாமரை மலராது என்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதற்கு தமிழிசை கூறியதாவது:

தாமரை மலர தலைகீழாக நடக்க தேவையில்லை. நேர்மையாக நடந்தால் போதும். இடதுசாரிகள் ஒரு மாநிலத்தில் தான் ஆட்சியில் உள்ளனர். ஆனால் பா.ஜனதா 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. காவியை பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம். மக்கள் வாழ்விற்காக தான் தாமரை மலர வேண்டும் என்கிறோம். தி.மு.க. கூட்டணி பலவீனமான கூட்டணி, எங்கள் கூட்டணியை பற்றி முத்தரசன் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Vaiko
Tags:    

Similar News